Categories
தேசிய செய்திகள்

புதிய பினாகா ஏவுகணை… சோதனை வெற்றி… நடுங்கும் நாடுகள்…!!!

ஒடிசா மாநிலத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பினாகா ஏவுகணை இன்று குறிப்பிட்ட இலக்கை அடைந்து வெற்றி கண்டது.

ஒடிசா மாநிலத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆகியவை இணைந்து உருவாக்கிய பினாகா ஏவுகணை இன்று சோதனை செய்யப்பட்டது. அந்த ஏவுகணை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. அது ஒடிசா கடற்கரையில் சண்டிப்பூரின் ஏவுதளத்திலிருந்து சோதனை செய்யப்பட்டது. அப்போது மொத்தம் ஆறு பினாகா ராக்கெட் ஏவுகணை சோதனை செய்யப்பட்டன.

அதில் அனைத்து ராக்கெட் ஏவுகணைகளும் வெற்றிகரமாக குறிப்பிட்ட இலக்கை அடைந்து தாக்கி அழித்தன. மேம்படுத்தப்பட்ட அந்த ஏவுகணை சோதனை வெற்றி கண்டதை தொடர்ந்து, அதனை ராணுவத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Categories

Tech |