லிஸ் டிரஸ் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே பிரித்தி படேல் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் புதிய பிரதமரை நியமிப்பதற்கான தேர்தல் கடந்த இரண்டாம் தேதியுடன் முடிந்தது . இந்நிலையில் நேற்று தேர்தல் வாக்குகள் எனப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் எதிர்பார்த்தது போல் லிஸ் டிரஸ் தேர்வாணர். இந்நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக லிஸ் டிரஸ் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே பிரித்தி படேல் தன்னுடைய ராஜினாமாவை அறிவித்துள்ளார்.
இது குறித்த அவர் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அனுப்பி உள்ள ராஜினாமா கடிதத்தை பிரித்தி படேல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் நம்முடைய புதிய பிரதமரை நான் வாழ்த்துகிறேன். மேலும் அவருக்கு நான் தொடர்ந்து ஆதரவளிப்பேன். மேலும் லிஸ் முறைப்படி பதவியேற்றதும், புதிய உள்துறை மந்திரி நியமிக்கப்பட்டதும், பின் வரிசையில் இருந்து நாட்டிற்கும் விதம் தொகுதிக்கும் எனது பொது சேவையை தொடர்வது எனது விருப்பம் என கூறியுள்ளார்.