ஜியோ நிறுவனம் 2023 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வரும் ஜியோ நிறுவனம் தற்போது புத்தாண்டை முன்னிட்டு ரூ.2,023 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
இந்த புதிய சலுகையில் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 2ஜிபி டேட்டா 252 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதனுடன் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ செக்யூரிட்டி செயலிகளுக்கான சந்தா இலவசம். மற்றொரு சிறப்பு சலுகையாக 2999 ரூபாய் சலுகையின் வேலிடியை கூடுதலாக 23 நாட்கள் அதாவது 388 நாட்கள் நீடித்துள்ளது.