Categories
மாநில செய்திகள்

புதிய புயல்… டிசம்பர் 4ஆம் தேதி வரை தடை… முக்கிய உத்தரவு..!!

புதிய புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கன்னியாகுமரி மீன்வளத் துறை எச்சரித்துள்ளது.

நிவர் புயல் தற்போது தான் கரையை கடந்துள்ள நிலையில், மறுபடியும் புதிதாக புரேவி என்ற புதிய புயல் தென்கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ளது. இந்த புயல் காற்றழுத்த தாழ்வு பகுதியிலிருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. புயலின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்நிலையில் புதிய புயல் காரணமாக நான்காம் தேதி வரை ஆழ்கடலில் மீன்பிடிக்க கன்னியாகுமரி மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தென் அந்தமான் கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், டிசம்பர் 1ஆம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Categories

Tech |