Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இனி எந்த கவலையும் இல்ல… சால்வை அணிவித்து நன்றி… மகிழ்ச்சியில் பொது மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பேருந்து வசதி செய்து கொடுத்த அதிகாரிக்கு கிராம மக்கள் சால்வை அணிவித்து நன்றி தெரவித்துள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்திற்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் கல்லூரி, பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் வெளியூர் செல்லும் பொது மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனால் குளமங்கலம் வடக்கு கிராமத்திலிருந்து கொத்தமங்கலம் வழியாக புதுக்கோட்டைக்கு அரசு பேருந்து இயக்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

அந்த போராட்டத்தின் போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு வழித்தடம் ஆய்வு செய்யப்பட்டு புதிதாக அரசுப் பேருந்து இயக்கம் தொடங்கியுள்ளது. இந்த பேருந்து காலை மாலை என இரு வேளைகளிலும் இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பேருந்து வசதி செய்து கொடுத்த போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஓட்டுனர், நடத்துனர் ஆகியோருக்கு கிராமத்தின் சார்பில் சால்வை அணிவித்து கவுரவப்படுத்தி நன்றி தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |