Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

புதிய பொலிவுடன் ” ரெனால்ட் க்விட்” பி.எஸ்.6 என்ஜின் ரூ. 2.92 லட்சம் ..!!

ரெனால்ட்  பி.எஸ்.6 க்விட் ஹேட்ச்பேக் காரை இந்திய நிறுவனத்தின்  சந்தையில் அறிமுகபடுத்தியுள்ளது.

புதிய பி.எஸ்.6 க்விட் ஹேட்ச்பேக் காரை இந்தியா  சந்தையில் ரெனால்ட் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது . இதன்  துவக்க விலை ரூ. 2.92 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய க்விட்:  எஸ்.டி.டி., ஆர்.எக்ஸ்.இ., ஆர்.எக்ஸ்.எல்., எஸ்.டி.டி.,ஆர்.எக்ஸ்.டி. மற்றும் கிளைம்பர் போன்ற மாடல்களில்  கிடைக்கிறது .

முந்தைய பி.எஸ்.4 மாடல்களின் விலையை விட புதிய பி.எஸ்.6 ரெனால்ட் க்விட் மாடல்களின் விலை ரூ. 9000 வரை அதிகம் . புதிய  டாப் எண்ட் பி.எஸ்.6 க்விட் ஹேட்ச்பேக்  மாடலின்  விலையானது  ரூ. 4.92 லட்சம் வரை நிர்ணயம் செய்துள்ளது.முன்னதாக  இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியிடப்பட்டுள்ளது . புதிய க்விட் காரில் பி.எஸ்.6 என்ஜின் தவிர எவ்வித மாற்றங்களும் செய்யவில்லை.

புதிய க்விட் காரில் மேம்பட்ட ஹெட்லேம்ப், அலாய் வீல் வடிவமைப்பு,   டெயில் லேம்ப் கிளஸ்டர், 8.0 இன்ச் தொடுதிரை வசதியுள்ள  இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் ,ஆப்பிள் கார் பிளே வசதி, ஆண்ட்ராய்டு ஆட்டோ, கிளஸ்டர், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., பின் புற பார்க்கிங்  போன்ற  சென்சார்கள் உள்ளனர்.

பி.எஸ்.6 ரெனால்ட் க்விட் மாடலில்   1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும்  800சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இரு என்ஜின்களின்  முறையே 54 பி.ஹெச்.பி. மற்றும் 68 பி.ஹெச்.பி. பவர் வழங்கப்பட்டுள்ளது .மேலும் 72 என்.எம். டார்க் செயல்திறன், 91 என்.எம். டார்க் செயல்திறன் அமைப்பு உள்ளது.இரு என்ஜின்களிலும்  5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்  வழங்கப்பட்டுள்ளது . மேலும் இதன் 1.0 லிட்டர் என்ஜினில் 5-ஸ்பீடு ஏ.எம்.டி. டிரான்ஸ்மிஷன் உள்ளது.

Categories

Tech |