புதிய போலீஸ் சூப்பிரண்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 13 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பத்ரி நாராயணன் என்பவர் பணியாற்றி வந்தார். இவரை கோவை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்திற்கு சென்னையில் துணை கமிஷனராக பணியாற்றி வந்த ஹரிஹரன் பிரசாத் என்பவரை போலீஸ் சூப்பிரண்டாக நியமித்துள்ளனர். இதற்கான ஆணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.