புதிய மன்னராக சார்லஸ் முடி சூடுவதால் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த வியாழக்கிழமை அன்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அடுத்த மன்னராக அவரது மகன் சார்லஸ் முடிசூட இருக்கிறார். இந்நிலையில் கிளாரன்ஸ் ஹவுஸ் மாளிகையில் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா தங்கி இருந்தனர். தற்போது சார்லஸ் மன்னராக முடிசூடி பக்கிங்ஹாம் அரண்மனைக்கு குடிபெயர இருப்பதால் கிளாரன்ஸ் ஹவுஸ் மாளிகையில் பணிபுரிந்த 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சார்லஸ் மன்னராக முடி சூடும் வரை அவருக்கான அனைத்து பணிகளையும் இந்த ஊழியர்களை செய்து முடித்துள்ளனர். இதில் நிதிபராமரிப்பு அதிகாரிகள், மக்கள் ஊடகப் பிரிவு அதிகாரிகள், வீட்டில் பணியாற்றி ஊழியர்கள் ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில் ஊழியர்கள் சிலர் தங்களது பணி பறிபோவதாக கூறியுள்ளனர். மேலும் சிலர் மன்னர் எங்களை பக்கிங்ஹாம் அரண்மனையில் பணியில் அமர்த்துவார் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட கடிதத்தில் தலைமை பொறுப்பில் மாற்றம் வரும் போது குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மாற்ற வரும் எனவும், கிளாரன்ஸ் ஹவுஸ் மாளிகை மிக விரைவில் மூடப்படும். சில ஊழியர்களுக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.