Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

புதிய முறையில் குறுமிளகு உற்பத்தி…. ஒரே செடியில் 40 நாற்றுகள்….!!

புதிய முறையை பயன்படுத்தி குறுமிளகு நடவு செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகளின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் நடைபெறுகிறது. இதனையடுத்து நெல், நேந்திரன் வாழை, பாக்கு மற்றும் மலை காய்கறிகள் போன்றவை சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு இணையாக விவசாயிகள் காபி, குறுமிளகு, இஞ்சி, கிராம்பு, ஏலக்காய் போன்ற பணப்பயிர்களும் விளைகிறது. இங்கு ஆண்டு தோறும் ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை மழை பெய்கிறது. இந்நிலையில் கூடலூர் தோட்டக்கலைத்துறை சார்பில் பொன்னூரில் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கும் விவசாயிகளுக்கு தேவையான தேயிலை, காபி, பாக்கு, குறுமிளகு போன்ற நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது இங்கு குறுமிளகு நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக தோட்டக்கலைத் துறையினர் புதிய உத்தியை பயன்படுத்துகின்றனர். அதாவது ஒரு பகுதியில் மண், சாணம் போன்ற கலவையை நிரப்பி அதன்மேல் மூங்கிலை இரண்டாக பிளந்து 45 டிகிரி கோணத்தில் சரித்து வைத்துள்ளனர். இதில் குருமிளகு நாற்றுக்களை உற்பத்தி செய்கின்றனர். இந்த முறையை கையாண்டு நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுவதால் ஒரே செடியில் 40 நாற்றுகள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது என தோட்டக்கலைத்துறையினர் கூறுகின்றனர். அதன்பிறகு குருமிளகு வேர்களிலிருந்து நாற்றுக்கள் தனித்தனியாக வெட்டி எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

Categories

Tech |