புகழ்பெற்ற ரியல்மி நிறுவனம் தங்களுடைய ரியல்மி GT 2 ஸ்மார்ட் போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் 6.62 இன்ச் FHD+ E4 AMOLED Display உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் Snapdragon 888 processor, 12 ஜிபி ராம் போன்றவைகளும் உள்ளது. இதில் 8 லேயர் ஹீட் டெசிபேஷன் ஸ்டிரக்சர் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் 50Mp primary camera, 8Mp ultra wide camera, 2Mp micro camera, 16Mp selfie camera போன்றவைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு ஆண்ட்ராய்டு 12 சார்ந்த யு.ஐ 3 கொண்ட GT 2 ஸ்மார்ட் போனில் கைரேகை சென்சார் உள்ளது. இதனையடுத்து 5000mAh பேட்டரி மற்றும் 65W அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட் இ, wi-fi, பிளூடூத், யுஎஸ்பி டைப்சி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த போனில் உள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை 38,999 ரூபாய் ஆகும்.