மானூரில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 12 லட்சத்தை ஞானதிரவியம் எம்.பி வழங்கியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், மானூரில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஞான திரவியம் எம்.பி தலைமை தாங்குகினார். மேலும் இந்த விழாவில் மானூர் வட்டார வளர்ச்சி அதிகாரி பொன்ராஜ், மாவட்ட திமுக துணை செயலாளர் மணி, ம.தி.மு.க தலைமை இணையதள தொடர்பாளர் மின்னல் அலி, மாவட்ட பிரதிநிதி தொப்பி மைதீன், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மானூர் பஞ்சாயத்திற்கு ரூ 12 லட்சம் ஞானதிரவியம் எம்.பி வழங்கியுள்ளார். மேலும் தெற்கு வாகைக்குளத்தில் பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கு ரூ 6 லட்சத்தை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கியுள்ளார். இதற்கு அடிக்கல் நாட்டு விழாவில் ஞானதிரவியம் எம்.பி தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவில் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.