பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் முக்கிய கோரிக்கை ஒன்றை பணியாளர் சங்க மாநில செயலர் முன்வைத்துள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பரிசு தொகுப்பை பேக்கிங் முறையில் வழங்க வேண்டும் என்று பணியாளர் சங்க மாநில செயலர் வலியுறுத்தியுள்ளார். நேற்று மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் 4,500 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 150 நகர கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
இதன் மூலமாக விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்குவது பற்றிய அறிவிப்பை ஆண்டுதோறும் குறியீடு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும், கூட்டுறவு அதிகாரிகள் இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருப்பவர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சங்கத்தில் காலி பணியிடங்கள் உள்ளது. பல இடங்களில் சங்க செயலாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட சங்கங்களை கவனித்து வருகின்றனர். இதனால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுகின்றது. இதன் காரணமாக கூட்டுறவு சங்கங்களில் உள்ள காலி பணியிடங்களை தாமதமின்றி நிரப்ப வேண்டும் என்று பணியாளர் சங்க மாநில செயலாளர் ஆசிரியர்த்தேவன் கூறியுள்ளார்.