Categories
மாநில செய்திகள்

புதிய ரேஷன் கார்டு வேணுமா?…. இனி அப்ளை பண்ணுவது ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

இந்தியாவில் பொது விநியோக திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு பருப்பு, அரிசி, மளிகை பொருட்கள், கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் குடும்பத் தலைவரின் வருமானத்தை பொருத்து PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC உள்ளிட்ட 5 வகையான ரேஷன் கார்டுகள் நடைமுறையில் உள்ளது. அதேபோல் சர்க்கரை ரேஷன் கார்டு, அரிசி ரேஷன் கார்டு என்றும் வகைகள் உள்ளது.

ரேஷன் கார்டு இருப்பிட சான்றாகவும், முக்கிய ஆவணங்களில் ஒன்றாகவும் உள்ளது. எனவே ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. முன்னதாக ரேஷன் கார்டுக்கு புதிதாக விண்ணப்பிப்பவர்கள் தாலுகா அலுவலகம் வரை செல்ல வேண்டியதாக இருந்தது. ஆனால் தற்போது ரேஷன் கார்டுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.

 

ரேஷன் கார்டுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தல் :-

1. https://tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு முதலில் செல்ல வேண்டும்.

2. பின்னர் அதில் ‘புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3. அதன்பிறகு புதிய அட்டைக்கான விண்ணப்பத்தை தேர்தெடுத்து முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். அதில் இமெயில் ஐடி, மொபைல் எண் என அனைத்து விவரங்களையும் சரியாக கொடுக்க வேண்டும்.

4. இதையடுத்து புகைப்படம் என்ற இடத்தில் 5 MB அளவிலான புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

5. பிறகு ‘அட்டை தேர்வு’ என்ற பாக்ஸில் என்ன அட்டை வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

6. அனைத்தும் முடித்த பிறகு reference எண் கிடைக்கும். அப்போது உங்களுடைய விண்ணப்ப பதிவு உறுதியாகும்.

7. இதையடுத்து அதிகாரிகள் உங்களுடைய விவரங்களை சரிபார்த்து உங்களுக்கான ரேஷன் கார்டை வீட்டிற்கு டெலிவரி செய்து வைப்பார்கள்

Categories

Tech |