இணைய திருடர்கள் புதிய வகையில் மோசடி சம்பவங்களில் ஈடுபடுவதால் வங்கி வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சைபர் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. இணைய மோசடியில் ஈடுபடுவோர் தற்போது புதிய முறையை கையாண்டு மோசடி சம்பவங்களை செய்துவருவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மொபைல்போனில், எஸ்எம்எஸ் எனப்படும் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அதன் மூலம் வங்கி கணக்கு மூடப்படுகின்றது.
இதை தவிர்ப்பதற்கு எஸ்எம்எஸ் இல் உள்ள இணைய இணைப்பின் மூலம் சரி பார்க்க செல்பவர்கள், அந்த இணைப்பில் நுழைந்தால் வங்கியின் இணையதளம் போன்று போலி இணையதளம் இருக்கும். அதில் நாம் பதிவு செய்யும் தகவல்களை வைத்து மோசடிக்காரர்கள் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை திருடுவார்கள். எனவே குறுஞ்செய்தி வரும் இணைய இணைப்பினை நாம் கிளிக் செய்யாமல் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.