Categories
தேசிய செய்திகள்

புதிய வகை ஒமிக்ரான் BF.7…. நடவடிக்கைகள் தீவிரம்….. மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!!

இந்தியாவிலும் புதிய வகை ஒமிக்ரான் BF.7 தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தியாவிலும் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் தற்போது சீனாவில் அதிக அளவில் புதியவகை பிஎப்.7 கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் எத்தனை பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவில்லை, அவர்கள் அதை குறிப்பிடவில்லை. சீனா, தென்கொரியா, ஜப்பான் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

ஜப்பானில் ஒரு நாளைக்கு 2 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பரவியுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 50 ஆயிரத்துக்கும் மேலாகவும், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் ஒருநாளைக்கு 40 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருக்கிறது. கொரோனா பாதிப்பே இல்லாமல் ஜீரோ கொரோனா பாதிப்பாக  இருந்த நாடுகளில் கூட ஆயிரக்கணக்கான புதிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை சுற்றுலாவுக்கு உகந்த ஒரு நாடாக பார்க்கப்படுகிறது. இதனால் சர்வதேச பயணிகள், சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு அதிகளவில் வருவதற்கு வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொய்வு நிலையில் இருந்த தொழில்துறை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதனால் உலக அளவில் இருக்கக்கூடிய தொழிலில் முனைவோர்கள் எல்லாம் இந்தியாவுக்கு வரக்கூடிய சூழலாகவும் இது இருக்கிறது.

இப்படியான சூழலில் புதியவகை கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவும் காரணத்தால் விழிப்புணர்வு விஷயங்களில் மத்திய அரசு தலையிட கடமைப்பட்டுள்ளது. அதற்கான பணிகளில் அவர்கள் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் உடனடியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அது மட்டுமில்லாமல் சுகாதாரத்துறை செயலாளர், அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளிடம் விழிப்புடன் இருங்கள் என அறிவுறுத்தியிருந்தார்.

தொடர்ந்து பண்டிகை காலம் வரக்கூடிய சூழல் என்பதால், அதாவது கிறிஸ்துமஸ், அதற்குப்பின் ஆங்கில புத்தாண்டு,  தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை, அதே நேரத்தில் இந்தியா முழுவதும் அறுவடை திருநாள் என வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படும். எனவே பொதுமக்கள் சந்தைகளில் பண்டிகைகளுக்காக அதிகம் கூடக்கூடிய வாய்ப்பு இருக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது.

மேலும் தொழில் துறை பாதுகாக்க கூடாது, சுற்றுலாத்துறை பாதிக்கப்பட கூடாது, கொரோனா பாதிப்பும் எந்த வகையிலும் பொதுமக்களுக்கு இடைஞ்சலாகவும், இடையூறாகவும் இருந்து விடக்கூடாது என்பதற்காக என்னென்ன மாதிரியான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பது சம்பந்தமாக மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்கள். இந்நிலையில் மிக முக்கியமான நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியத்திற்கு மேல் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

பிரதர் நடத்தக்கூடிய ஆலோசனையின் முடிவில் தான் மாநில அரசுக்கு மத்திய அரசு என்னென்ன அறிவிப்புகள் கொடுக்கப் போகிறார்கள் என்பது தெரியும். டெல்லி மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் அதையெல்லாம் நீக்கி விட்டார்கள். மீண்டும் முகக்கவசம் அணிவதை கடினமாக்குவதா? அல்லது மாநில அரசின்  உரிமைக்கு கீழ் விட்டுவிடலாமா என்பது மத்திய அரசின் ஆலோசனைக்கு பின் தெரியவரும்.

மருத்துவர்கள் சொன்னது போல் தடுப்பூசி என்பது 85 சதவீதம் தடுப்பூசி போட்டாலும், பூஸ்டர் டோஸ் நிறைய மாநிலங்களில் நிறையபேருக்கு போடவில்லை என புள்ளி விவரங்கள் சொல்கிறது. எனவே பூஸ்டர் டோஸ் போடுவதற்கான ஒரு அவசரமான நடவடிக்கையை மாநில அரசர்களுக்கு மத்திய அரசு அறிவிப்பாக கொடுக்கும் என நம்பலாம்..

Categories

Tech |