இங்கிலாந்தில் பரவத் தொடங்கியுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றும் தன்மை 70 சதவீதம் அதிகமாக இருப்பதால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன.சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் தொற்றும் தன்மை 70 சதவீதம் அதிகமாக இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய மத்திய சுகாதாரத்துறை இன்று அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக இங்கிலாந்து செல்லும் விமானச் சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.