இங்கிலாந்தில் பரவ தொடங்கியுள்ள புதிய வகை கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் மீண்டும் மரண பயத்தில் உள்ளன.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்தில் தற்போது பரவிவரும் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் அதிகமாக பரவ தொடங்கியுள்ளது. அந்த வைரஸ் எளிதில் பரவக்கூடிய வகையில், ஆனால் மிகவும் ஆபத்தானது என்பதற்கு ஆதாரம் இல்லை என்று இங்கிலாந்து தெரிவித்துள்ளது. இந்த பரிமாற்றத்தின் மரபணு மாற்றத்தை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு மீண்டும் தடுப்பூசி கண்டறியும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலக நாடுகளிடையே மீண்டும் மரண பயத்தை உண்டாக்கி உள்ளது.