சீனாவில் புதிய வகை கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. இது குறித்து ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸ் கூறியதாவது, “சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நாட்டிற்குள் அனுமதிக்கும் விதிகளில் ஆஸ்திரேலியா எந்த மாற்றமும் செய்யவில்லை.
மேலும் சுகாதார நிபுணர்களிடமிருந்து நாங்கள் தகுந்த ஆலோசனைகளை தொடர்ந்து பெறுகிறோம். இதனையடுத்து உலகெங்கிலும் பரவி வரும் புதிய வகை கொரோனா தாக்கத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என அவர் கூறியுள்ளார்.