புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் பொது முடக்கம் அறிவிக்கப் பட மாட்டாது என அந்நாட்டின் சுகாதாரத் துறை செயலாளர் கூறியுள்ளார்.
ஒரு சில உலக நாடுகளை புதியவகை கொரொனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் பிரித்தானியாவில் தற்போதைக்கு எந்த போதும் முடக்கமும் அறிவிக்கப்படும் எண்ணமில்லை என அந்நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் சஜித் ஜாவித் கூறியுள்ளார். Omicron எனப்படும் இந்த புதிய வகை கொரோனா தொற்று காரணமாக பயணத் தடைகள், சோதனைகள், முக கவசம் போன்றவை அத்தியாவசியமாக உள்ளன என கூறியுள்ள அவர் அதற்காக பொது முடக்கத்தை அறிவிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை எனக் கூறியுள்ளார்.
மேலும் பிரித்தானியாவின் எசெக்ஸில் உள்ள நாட்டிங்ஹாம் மற்றும் ப்ரென்ட்வுட்டில் இரண்டு பேருக்கு இந்த புதிய வகை கோரானா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒரு விஷயமாக உள்ளதாக அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் சிறப்பாக அமைய பிரார்த்தனை செய்வதாகவும், மேலும் பிரித்தானியாவில் வரும் செவ்வாய்க்கிழமை முதல் கடைகள் மற்றும் பொது இடங்களில் மீண்டும் முக கவசம் என்பது கட்டாயம் ஆக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.