Categories
மாநில செய்திகள்

புதிய வகை வைரஸ்…. தமிழக மக்களே உஷார்…. சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் எச்சரிக்கை….!!!!!

தமிழகத்தில் தற்போது பரவக்கூடிய பி ஏ4, பி ஏ 5 வகை தொற்று மிக வேகமாக பரவக்கூடியது என்றும்,அது அளவுக்கு மீறி வீரியமடைந்து உள்ளதால் அனைவரும் முக கவசம் அணிவது அவசியம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் முக கவசம் அணிவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை செங்கல்பட்டு மாவட்டத்தில் சந்தித்து நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் தற்போது பரவக் கூடிய புதியவகை கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவக் கூடிய அளவுக்கு வீரியம் உடையது. குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அவரை சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே பொதுமக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவேளையை கடைபிடிக்க வேண்டும்.  லட்சியமாக இருப்பது பெரும் தவறு. தொற்று வந்த பின் வருத்தமடைவதை விட, முன்னெச்சரிக்கை இருந்து கொள்வது நல்லது.வெளியிடங்களுக்கு செல்லும் போது தவறாமல் முககவசம் அணிய வேண்டும். ‘சானிடைசர்’ பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொருவரும் சுயபாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |