நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் 2022- 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்த நிலையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும்.
இந்நிலையில் தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கொரோனா பரவல் குறைந்துள்ளது என்று பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உலகில் வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா மாறி வருகிறது. சிறு, குறு நடுத்தர தொழில்துறையினரை மேம்படுத்தும் வகையில் புதிய வரிவிதிப்புகள் இருக்காது. ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.