ஆண் வாக்காளர்களை விட 607 பெண் வாக்காளர்கள் அதிகமாக இருப்பதாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திள் உள்ள மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் வைத்து நகர்ப்புற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகராட்சி தலைமை எழுத்தாளர் கணேசன் கலந்துகொண்டார். இந்நிலையில் பேரூராட்சியாக இருந்த மானாமதுரை தற்போது நகராட்சியாக மாற்றபட்டுள்ளது. அதனால் மானாமதுரை பகுதியில் உள்ள 27 வார்டுகள் வரையறை செய்யப்பட்டு புதிய வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இதில் 12 ஆயிரத்து 302 ஆண் வாக்காளர்கள் மற்றும் 12 ஆயிரத்து 909 பெண் வாக்காளர்கள் இருப்பதாக பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் இந்த பட்டியலில் எதுவும் தவறு இருந்தால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்படுள்ளது.