Categories
உலக செய்திகள்

புதிய வாழ்க்கை அமைத்துத் தருவதாக கூறி…. இளம் பெண்கள் கடத்தல்…. அதிர்ச்சியில் அதிகாரிகள்….!!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் ஒருவர் இளம் பெண்களை அழைத்து வந்து புதிய வாழ்க்கை அமைத்து தருவதாக கூறியுள்ளார். அந்த நபர், தன் மகன்களுக்கு திருமணம் செய்துவைப்பதாகக் கூறி, பணம் கொடுத்து அல்பேனியா நாட்டிலிருந்து  இளம்பெண்களை அழைத்து வந்துள்ளார். ஆனால் கடந்த 16 ஆண்டுகளாக அந்த நபரும், அவரது மகன்களும் அந்தப் பெண்களை கொடுமைப்படுத்தியிருக்கின்றார்கள். இதனைத் தொடர்ந்து காலை முதல் இரவு வரை அந்தப் பெண்களை வீட்டு  வேலை செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளன.

மேலும் அந்த  பெண்களை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதியளிக்கப்படவே இல்லை. அந்த நபர் மற்றும் அவரது நான்கு மகன்கள் மீது துஷ்பிரயோகம், வன்புணர்வு முதலான குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டு அறிக்கையானது 30 பக்க நீளம் கொண்டுள்ளது. அந்தப் பெண்களுக்கு குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், அவர்களும், அவர்களுடைய 10 பிள்ளைகளும் தற்போது அரசின் பொறுப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளார்கள். மேலும் அவர்களுக்கு புதிய வாழ்க்கை அமைத்துத் தருவதாகக் கூறி ஏமாற்றி சுவிட்சர்லாந்துக்கு அழைத்துவந்த அந்த நபரும் அவரது நான்கு மகன்களும் Bern மாகாண நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்கள்.

Categories

Tech |