புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பீகாரில் நடந்து கொண்டிருக்கும் சட்டசபை தேர்தலையொட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று மாதேபுரா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அம்மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி சரத்யாதவின் மகள் சுபாஷினி யாதவ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவு தெரிவித்து பேசிய ராகுல் காந்தி கூறுகையில், “கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தொழிலாளர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அவர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தார்கள்.
ஆனால் இப்போது அவர்களிடம் சென்று ஓட்டு சேகரித்து வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி, தனது இதயத்தில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடம் அளித்திருந்தால், தற்போது தன் உயிரை விட்டு இருக்க வேண்டும். ஊரடங்கு காலகட்டத்தில் நடந்தது போன்ற நடந்து இருக்க மாட்டார். அதனைப் போலவே நிதிஷ்குமார் இவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு உருவாகி தருவதாகவும், பீகார் மாநிலத்தை முற்றிலும் மாற்றி காட்டுவதாகவும் கூறினார். ஆனால் தற்போது வரை அவர் எதுவுமே செய்யவில்லை.
அவர் நடத்தும் பொதுக்கூட்டங்களில் இந்த வாக்குறுதி பற்றி இளைஞர்கள் கேள்வி எழுப்பினால், அவர்களை மிரட்டி துரத்தி அடிக்கிறார்.மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் என்று கூறியுள்ளது. ஆனால் அது உண்மை அல்ல. அதனைப்பற்றி பேசுபவர்களுக்கு மட்டுமே விடுதலை கிடைத்துள்ளது. இந்த சட்டங்கள் அனைத்தும் புதிய இடைத்தரகர்கள் உருவாவதற்கு வழிவகுத்திருக்கிறது. அதிலும் சிறிய இடைத்தரகர்கள் அல்ல, அம்பானி மற்றும் அதானி போன்ற பெரிய இடைத்தரகர்கள் உருவாகியிருக்கிறார்கள்.
அதுமட்டுன்றி உணவு தானியங்கள் அனைத்தும் நேரடியாக பெரிய கொடுமைகளுக்கு சென்று சேர்கின்றன. அங்கு சட்டவிரோதமான முறையில் பதுக்கப்பட்ட செயற்கையான விலை ஏற்றத்திற்கு பின்னர் விற்கப்படுகின்றன. அதனால் புதிய வேளாண் சட்டங்களால் காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களின் விலையில் அதிக அளவு உயர்ந்துள்ளது. சரத் யாதவ் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளார். அவர் எனக்கு மிகப்பெரிய குரு போன்றவர்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.