Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“புதிய வேளாண் சட்டம்” திரும்ப பெற வேண்டும்…. காங்கிரஸ் கட்சியினர் சத்யாகிரகம்…!!

புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம் நடத்தியது. 

மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண் சட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பல வகையில் போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதே போன்று தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் வாணியம்பாடி அருகே மத்திய அரசு அமல்படுத்திய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் சார்பாக சத்தியாக்கிரகம் செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஆலங்காயம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலையின் அருகே இந்த சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரபு உட்பட பலர் பங்கேற்றனர். போராட்டத்தின்போது புதிய வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Categories

Tech |