Categories
உலக செய்திகள்

புதிய வைரஸால் இறப்புகள் அதிகரிக்கும்…. 350 விஞ்ஞானிகள் வெளியிட்ட…. அதிர்ச்சிகரமான ஆய்வுகள்…!!

புதிய கொரோனோ வைரஸ் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சிகரமான ஆய்வை வெளியிட்டுள்ளனர். 

சுவிற்சர்லாந்தில் வெளியான அறிக்கையில், சீனாவில் இருந்து உருவானதாக கூறப்பட்டு வரும் கொரோனா விட மிகவும் ஆபத்தானது பிரிட்டனில் தற்போது கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெனிவா வைராலஜிஸ்ட் இசபெல்லா எக்கர்லே உட்பட 350 விஞ்ஞானிகள் இணைந்து தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது உருமாறிய புதிய கொரோனா வைரஸ் எவ்வளவு நாட்கள் நீடிக்கும் மேலும் உருமாற்றம் பெற வாய்ப்புகள் இருக்கிறதா என்று கணிக்க முடியாமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இது அதிக ஆபத்தானதாக மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் முன்னர் பரவிய கொரோனா வைரசை விட இந்த புதிய தொற்று மரண எண்ணிக்கையை அதிகம் ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளனர். மேலும் அடுத்த சில நாட்களில் இதனை கடந்துசெல்ல ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் அனைத்து நாடுகளிலும் ஒரே திட்டத்தை அமல்படுத்த வேண்டும் அப்போதுதான் இந்த வைரஸ்சை மேலும் உருவெடுக்காமல் தடுக்க முடியும் என்றும் கூறியுள்ளனர். மேலும் இதன் முதல் நடவடிக்கையாக ஐரோப்பியாவில் உள்ள அனைத்து நாடுகளிலும் ஒரே நாளில் ஊரடங்கு அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |