Categories
உலக செய்திகள்

புதிய வைரஸின் அட்டூழியம்….. எங்க நாட்டுக்குள்ள நுழையக்கூடாது…. பிரிட்டன் மக்களை ஜெர்மனி நடத்திய விதம்….!!

புதிய கொரோனா வைரஸ் அச்சத்தால் பிரிட்டன் மக்களை அலைக்கழிக்க வைத்துள்ளது ஜெர்மனி விமான நிலையம்.

பிரிட்டனில் வேகமாக பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால் பிரிட்டன் பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வருவதற்கு பல நாடுகளும் தடை விதித்துவருகிறது. இந்நிலையில் இத்தடையை செயல்படுத்துவதற்கு முன்பு ஜெர்மனிக்கு வந்த பிரிட்டானிய மக்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது. இவர்கள் பாதுகாப்பு உடை அணிந்த செவிலியர்களால் சோதனை செய்யப்பட்டுள்ளனர். பின்பு அவர்கள் அனைவரையும் அதாவது சுமார் 63 பேரை ஒரே அறையில் உறங்க கட்டாயப்படுத்தி உள்ளனர்.

மேலும் விமான நிலையத்திலிருந்து மறுநாள் விடியும் வரை வெளியில் செல்லவும் அவர்களை அனுமதிக்கவில்லை. இதுகுறித்து பிரிட்டன் மக்கள் கூருகையில், எங்கள் விருப்பத்தை மீறி தங்க வைத்துள்ளார்கள் என்றனர். மற்றுமொருவர் ஜெர்மனியே வேண்டாம் என்று கூறிவிட்டு பிரிட்டனுக்கே திரும்ப சென்றுவிட்டாராம்.  இதற்கு பதிலளித்துள்ள ஜெர்மன் விமான நிலைய சுகாதார துறை அதிகாரிகள், “இந்த புதிய வகை வைரஸ் தங்கள் நாட்டுக்குள் நுழைய விடாமல் தடுப்பதே எங்களின் நோக்கம்” என்று கூறியுள்ளனர்

Categories

Tech |