பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.
பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனோ வைரஸ் தாக்கத்தால் உலகின் பல நாடுகள் பிரிட்டனை தனிமைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனோவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் பிரிட்டனிலுள்ள புதிய வகை வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் இப்புதிய வைரஸ் ஆனது லண்டன் மற்றும் இங்கிலாந்தில் உள்ள தென்கிழக்கு பகுதியில் தீவிரமாகி வருவதால் இந்நாட்டில் உள்ள ஒரு சில பகுதிகளில் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் கொலம்பியா, கௌதமாலா,பனாமா போன்ற 20 நாடுகள் பிரிட்டனின் விமான சேவைக்கு தடையை அறிவித்துள்ளது.
மேலும் சவுதி அரேபியா தங்கள் நாட்டின் எல்லைகள் முழுவதையும் மூடியுள்ளது. சவுதி அரேபியாவை தொடர்ந்து ஓமன், குவைத் போன்ற நாடுகளும் தங்கள் எல்லைகள் அனைத்தையும் அடைத்து விட்டனர். இந்நிலையில் பிரிட்டனில் கடந்த ஒரே நாளில் 36,804 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பிரிட்டனில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் மட்டுமே 691 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 68 ஆயிரத்து 307 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.