Categories
தேசிய செய்திகள்

புதிய வைரஸ் : எந்த அளவுக்கு அபாயகரமானது ? எந்த அளவுக்கு பரவக் கூடியது? முழு தகவல் இதோ….!!

புதிய வகை கொரோனா வைரஸ் என்பது என்ன ? 

மாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ்க்கு vui – 202012/01 என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். மனித செல்களில் இந்த புதிய வைரஸில் தொற்றிக் கொள்ள உதவும் அவற்றின் கொக்கி போன்ற அமைப்பில் உள்ள புரதம் தான் தற்போது மரபியல் திடீர் மாற்றம் அடைந்துள்ளது.

இந்த இது எந்த அளவுக்கு தொற்றக் கூடியது : 

vui – 202012/01  கொரோனா வைரஸ் டிசம்பர் 2020 இல் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸிலிருந்து மாற்றமடைந்த புதிய வைரஸ் பதிப்பு ஆகும். இது மற்ற வைரஸ்களை விட 70 சதவிகிதம் அதிகம் கூடியதாகும். 

ஏன் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் அச்சமூட்டுகிறது : 

மூன்று விஷயங்கள் காரணமாக இந்த வைரஸ் கவனம் ஈர்க்கிறது. அவை,

  • மற்ற வகை வைரஸ்களுடன் ஒப்பிடுகையில் இவை அதிகம் பரவுகின்றன. 
  • வைரஸையே பாதிக்கக்கூடிய மரபியல் மாற்றங்கள் இதன் பாகத்தையே பாதிப்பது  மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 
  • வைரஸ்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இவை மற்ற கொரோனா வைரஸ்களை விட செல்களில் அதிகமாக பரவுவது ஆய்வக சோதனையில் தெரியவந்துள்ளது. 

ஏன் இது ஆபத்தானது ? 

இந்த புதிய மாற்றம் அடைந்த கொரோனா  வைரஸ் மற்றும் வைரஸ்களை விட தற்போது ஓங்கியதாக  உள்ளது. இது வேகமாக பரவினால் இதை கட்டுப்படுத்துவது மிகவும் சிக்கலானதாக கூடும். 

எங்கே, எப்போது இது கண்டறியப்பட்டது ? 

இது செப்டம்பர் மாதத்தில்தான் பிரிட்டனில் முதலில் கண்டறியப்பட்டது. நவம்பரில் லண்டனில் கொரோனா  பாதித்தவர்களில்  கால் பகுதியினர் புதிய வகை வைரஸ் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்தப் புதிய வைரஸ் உயிருக்கு ஆபத்தானதா?  

இந்த புதிய வைரசால் தீவிர உடல்நல பாதிப்பு ஏற்படும் என்பதற்கு இதுவரை உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் இது அசல் வைரசை விட மிக வேகமாகப் பரவி வருவதாக சொல்லப்படுகின்றது. 

புதிய தொற்றுக்கள் : 

பிரிட்டன் சுகாதார செயலாளர் மேட் ஹான்காக் அளித்த தகவலின்படி, 60 உள்ளூர் பகுதிகளில் 1,100 பேர் இந்த மாற்றமடைந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 

பின்வரும் நாடுகளில் மாற்றமடைந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது டென்மார்க், 

ஆஸ்திரேலியா, 

நெதர்லாந்து,

 இத்தாலி 

இந்தியாவுக்கும் இந்த வைரஸ் வந்துவிட்டதா ? 

இந்தியாவில் இதுவரை மாற்றமடைந்த வைரஸ் கண்டறியப்படவில்லை என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், டிசம்பர் 22 இல் வெளியான தகவலின்படி, பிரிட்டனில் இருந்து டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய 266 பேரில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அது புதிய வகை கொரோனா  வைரஸ் தானா ? என்பது  அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிய வரும், அதுவரை காத்திருப்போம்.

பிரிட்டனுக்கு விமான சேவை ரத்து செய்துள்ள நாடுகள் : 

இந்தியா, பாகிஸ்தான், போலாந்து, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ரஷியா மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவையை ரத்து செய்துள்ளன. சவுதி அரேபியா, குவைத்  உள்ளிட்ட நாடுகள் எல்லைகளை முழுமையாக மூடியுள்ளன. 

மாற்றமடைந்த கொரோனா வைரஸ் வகைகள் வேறு உள்ளனவா ? ஸ்வீடனில் மரபியல் மாற்றம் அடைந்த புதிய வைரஸ் வகையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவை வழக்கமான வைரஸ்களை விட இரண்டு மடங்கு அதிகமாக தொற்றக் கூடியவை. 

Categories

Tech |