இங்கிலாந்தில் பரவத் தொடங்கியுள்ள புதிய கொரோனா வைரஸ் இளம் வயதினர் மற்றும் குழந்தைகளை தாக்குவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரு மாறியுள்ள கொரோனா வைரஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை விரைவாகவும், அதிக சக்தியுடனும் தாக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் குமட்டல், வாசனை இழப்பு, இருமல், காய்ச்சல், வலி மற்றும் சளி ஆகியவை இதன் அறிகுறிகளாக இருக்கும். இந்த உருமாறிய வைரஸுக்கு சிகிச்சை அளிப்பது கடினம் என்றால், இறப்பு விகிதங்கள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. புதிய மாறுபாடுடன் இதுவரை பதிவு செய்யப்பட்ட பாதிப்புகளில் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமன்றி அந்த வைரஸ் இளம் வயதினர் மற்றும் குழந்தைகளை அதிகம் தாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதுள்ள கொரோனா வைரஸ் ACE 2 ஏர்பிகளை எளிதாக இணைத்து உயிர் அளவிற்குள் செல்வதால் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.