புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க கோரி செப்டம்பர் 26 வரை 10. 54 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில், 7.28 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட நிலையில், 2.61 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கப்பட்ட விண்ணப்பங்களில் 6.65 லட்சம் பேருக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.. 63 ,661 ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி நடந்து வரும் நிலையில் 63, 780 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Categories