பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன் BMW கார் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதையடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார் . மேலும் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் . இதைத்தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை சென்ற ரம்யா நான்காவது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ரம்யாவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் ரம்யா விலையுயர்ந்த BMW கார் வாங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். தற்போது ரம்யா தனது புதிய காருடன் கெத்தாக போஸ் கொடுத்த இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.