இயக்குனர் ஐஸ்வர்யா முசாபிர் பாடல் குறித்த அப்டேட்டை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவும் தனுஷும் அண்மையில் பிரிந்தனர். இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா முசாபிர் என்ற காதல் ஆல்பம் பாடலை இயக்கினார். மார்ச் 8ஆம் தேதி வெளியாகவிருந்த முசாபிர் ஆல்பம்பாடல் ஐஸ்வர்யாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வெளியாகவில்லை.
இந்நிலையில் முசாபிர் பாடல் குறித்து அப்டேட்டை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா கூறியுள்ளதாவது முசாபிர் பாடலின் டீஸர் விரைவில் வெளியிடப்படும். மேலும் முசாபிர் பாடல் கூடிய விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இப்பாடல் இரண்டு முறை தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.