Categories
மாநில செய்திகள்

புதுக்கோட்டையில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதா….? தமிழக உள்துறை செயலாளருக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இடையூர் பகுதியில் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த கழிவு நீர் கலக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தண்ணீரை குடித்த பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு இரட்டை குவளை முறை, கோவில்களுக்கு செல்ல அனுமதிக்காது போன்ற தீண்டாமை முறைகள் வழக்கத்தில் இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக நீதிபதிகள் முறையாக மனு தாக்கல் செய்தால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினர். இந்நிலையில் கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன் ஒரு அமர்வை முன் வைத்தார். அதில் புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை பல பகுதிகளில் தீண்டாமை வன்கொடுமைகள் நடைபெற்று வருகிறது. எனவே இவற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

இதனையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இது தொடர்பாக உடனடியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதோடு இரட்டை குவளை, கோவிலில் அனுமதிக்காதது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலத்துடன் சாக்கடை நீர் கலந்தது என 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் மனித உரிமைகள், சமூக நீதி பிரிவு, துணை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக உள்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் மனு தாரரின் கோரிக்கையின்படி சிறப்பு குழு அமைப்பது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது எனவும் உறுதி கொடுத்தனர்.

Categories

Tech |