புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தொழில் பிரிவு அணி சார்பில் இலவசமாக பொதுமக்களுக்கு மெழுகுவர்த்திகள் வழங்கப்பட்டன.
நிவர் புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகளவில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்திருந்தது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி மற்றும் கொசுவர்த்தி காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அதிகளவில் வாங்கி வருகின்றனர்.
இதனால் மெழுகுவர்த்தி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு புதுக்கோட்டையில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தொழில் பிரிவு சார்பில் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக மெழுகுவர்த்தி வழங்கப்பட்டது. இதனை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.