புதுக்கோட்டை மாவட்டத்தில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 75 வது சுதந்திர தின விழா மற்றும் சுதந்திரத் திருநாள் அமுத பெரு விழா கொண்டாடப்பட்டு வருகின்றதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக “பிளாஸ்டிக் மாசில்லா புதுக்கோட்டை மாவட்டம்” மற்றும் மஞ்சப்பை அவசியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டமானது நேற்று நடைபெற்றிருக்கின்றது. இந்த மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த மாரத்தானில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த மாரத்தானது அண்ணா சிலை, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் வழியாக 4.5 கிலோ மீட்டர் சென்று மறுபடியும் விளையாட்டு அரங்கத்தை அடையவேண்டும். இந்த மாரத்தானில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டும் வெற்றி பெற்றவர்களுக்கு அமுத பெரு விழா இறுதி நாளன்று பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட இருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் குமார் மற்றும் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.