Categories
உலக செய்திகள்

“புதுசா உருவாக்கிய கிராமம்” இந்தியாவை சீனா அச்சுறுத்துகிறது…. நெட்டிசன்கள் டுவிட்டரில் கருத்து…!!!

மறைமுகமாக சீனா அமைத்துள்ள கிராமத்தின் புகைப்படங்கள் தொடர்பாக நெட்டிசன்கள் டுவிட்டரில் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர்.

சீனா தனது அண்டை நாடுகளுடன் சண்டையிட்டு எல்லைகளை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் கடந்த சில தினங்களில் இந்தியாவுடன் சீனா மோதியதால்  தற்போது எல்லை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சீனாவின் அடுத்த அண்டை நாடான பூடானின் டோக்லாம் என்ற பகுதியில் சீனா புதிய கிராமம் ஒன்றை உருவாக்கி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த கிராமத்தின் புகைப்படங்கள் தற்போது சீனாவின் ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

இந்த கிராமம் பூடான் நாட்டின் எல்லையில் அமைந்திருப்பதால் அந்நாட்டின் அனுமதியை பெற்று சீனா அக்கிராமத்தை உருவாக்கியதா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. கடந்த 2017 ஆம் வருடம் இந்த கிராமத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சீனா பூடானை ஆக்கிரமித்திருப்பது இந்தியாவை அச்சுறுத்துவதற்காகத்தான் என்று கூறப்படுகிறது.

பூடானின் ராணுவம் சிறியது என்பதால் இந்தியா தனது உதவிகளை பூடானுக்கு செய்து வருகிறது. இதையடுத்து இந்திய தூதர் இது குறித்து பூடானிடம் கேட்டபோது, பூடானில் சீனாவுக்கு சொந்தமாக எந்த இடமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள கிராமத்தின் புகைப்படங்களை குறித்து பலரும் கேள்வி எழுப்பி கொண்டு வருகின்றனர். மேலும் இந்திய ராணுவத்திற்கு யோசனை சொல்லும் அளவிற்கு பலரும் சமூக வலைதளங்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சீனா  உண்மையில் பூடானில் கிராமத்தை உருவாக்கி இருக்கும் என்றும், சீனா அண்டை நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது என்றும் கூறி வருகின்றனர். மேலும் இது எல்லையை ஆக்கிரமிக்கத் துடிக்கும் சீனாவின்  அஜாக்கிரதையான செயல் ஆகும். இதனால் இந்தியா வந்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பலர் தங்கள் கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

Categories

Tech |