ஆடி மாதம் என்பது இறைவனுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் இறைவனை தவிர வேறு எந்த எண்ணமும் வரக்கூடாது என்பதற்காக திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் இந்த மாதத்தில் செய்வது கிடையாது. ஆடி மாதம் என்றாலே திருவிழா மாதமாக பார்க்கப்படும். இறைவனுக்காக ஒதுக்கப்பட்ட மாதங்களில் ஆடி மாதம் மார்கழி மாதம் ஒன்று. கிராமத்தில் ஆடி மாதம் முழுவதும் விழாக்கோலமாக காட்சி அளிக்கும். அதுமட்டுமில்லாமல் தங்களின் வாழ்வாதாரமான உழவுத் தொழில் தொடங்குவதற்காக காலமாகவும் அது பார்க்கப்படுகின்றது.
இறைவனை நினைத்து வணங்கி வழிபடுவதை தவிர வேறு எந்த எண்ணமும் வரக்கூடாது என்பதற்காக திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுபகாரியங்கள் இந்த மாதத்தில் நாம் செய்வது கிடையாது. இதனால் ஆடி மாதம் மிகவும் மங்களகரமான மாதம் என்பதால் சுபகாரியங்கள் நடத்தப்படுவது இல்லை. அதே சமயம் இறைவனை மனதார வழிபடுவதற்கு தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது எனவும் கூறுகின்றன. இன்றளவில் கிராமங்களில் புதுமணத்தம்பதிகள் ஆடி மாதம் தொடங்கியதும், திருமணமான பெண் அவரது பிறந்த வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுவது வழக்கமாக உள்ளது. ஏனெனில் ஆடி மாதத்தில் தம்பதிகள் சேர்ந்தால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும்.
சித்திரை மாதத்தில் வெயில் அதிகமாக இருக்கும் பொழுது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பெண் மிகவும் அவதிப்படுவார்கள். இதன் காரணமாகவே ஆடி மாதத்தில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து வந்து விடுகின்றன. அதுமட்டுமில்லாமல் திருமணம் என்றால் சற்று செலவு அதிகரிக்கும். அதனால் உழவுத்தொழில் முக்கிய தொழிலாக இருந்த காலகட்டத்தில் விவசாயத்திற்கு என்று ஒதுக்கி வைக்கப் பட்டிருக்கும் பணத்தை திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு செலவு செய்து விட்டால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று எண்ணி அந்த மாதத்தில் மக்கள் திருமணம் போன்ற சுபகாரியங்களை செய்யாமல் இருந்து வந்தனர்.