Categories
ஆட்டோ மொபைல்

புதுசா கார் வாங்க போறீங்களா?…. கம்மி விலையில் வாங்க அட்டகாசமான ஆஃபர்…. இதோ பாருங்க….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி நவம்பர் மாதத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. அதன்படி இந்த மாதத்தில் மாருதி சுசுகி ஆல்டோ கே 10 கார் வாங்கினால் 57 ஆயிரம் வரை உங்களால் சேமிக்க முடியும். அதில் 35 ஆயிரம் ரொக்க தள்ளுபடியும், கார்ப்பரேட் போனஸ் 7000 ரூபாய் மற்றும் எக்சேஞ்ச் போனஸ் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

மேலும் மாருதி சுசுகி செலிரியோ கார் வாங்கினால் 56 ஆயிரம் ரூபாய் வரை உங்களால் சேமிக்க முடியும். மாருதி சுசுகி எக்ஸ் ப்ரோசோ காருக்கு 56 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி, இந்த காருக்கு 35 ஆயிரம் ரொக்க தள்ளுபடி வழங்கப்படும். மேலும் மாருதி சுசுகி வேகன் ஆர் கார் வாங்கினால் 41 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி. மாருதி சுசுகி ஆல்டோ 800 கார் வாங்கினால் 36 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி. மாருதி டிசையர் காருக்கு 32,000 தள்ளுபடி, மாருதி சுசுகி ஸ்விப்ட் காருக்கு 30,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |