Categories
தேசிய செய்திகள்

புதுசா வாங்குன புல்லட்டுக்கு பூஜை…. திடீரென வெடித்து சிதறிய பயங்கரம்…. பரபரப்பு வீடியோ….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டம் அருகே குண்டகல்லுவில் பிரசித்தி பெற்ற கசாபுரம் ஆஞ்சநேய சுவாமி கோவில் ஒன்று உள்ளது. அங்கு மைசூரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் யுகாதி பண்டிகையை முன்னிட்டு தனது புதிய புல்லட் வண்டிக்கு பூஜை போட சென்றுள்ளார். அவர் நீண்ட தூரத்தில் இருந்து வந்ததால் வண்டி சூடாக இருந்துள்ளது. இந்நிலையில் கோவிலில் வண்டியை பூஜை போட நிறுத்திய போது திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓடத் தொடங்கினர்.

இந்நிலையில் சற்றும் எதிர்பாராத நேரத்தில் புல்லட் வண்டியில் பெட்ரோல் டேங்க் வெடித்து மின்னல் வேகத்தில் காற்றில் பறந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது நீண்ட நேரம் நிற்காமல் ஓட்டி வந்ததால் வாகனம் சூடு தாங்காமல் தீ பிடித்து வெடித்ததா என்று விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |