செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணாமலை மிரட்டுகிறார் என்றால்… நான் எதற்கு மிரட்ட வேண்டும் ? அவர் யார் என்றே எனக்கு தெரியாது. அவருடைய போன் நம்பர் என்னிடம் உள்ளதா ? நான் போன் பண்ணேன் பேசி இருக்கிறேனா ?அதாவது அவர்கள் ஒரு கருத்தை சமூக வலைதளத்தில் போடுகிறார்கள். உடனடியாக அதற்கு பதில் கூறுவதற்காக இன்னொரு கருத்தை போடுகிறார்.
அதில் நான் எப்படி பொறுப்பேற்க முடியும். அவர்கள் போடுகின்ற கருத்திற்கு நான் பொறுப்பேற்க முடியாது. அதற்கு பதிலடியாக யாரோ ஒரு சகோதர, சகோதரிகள் போடுகின்ற கருத்திற்கும் நான் பொறுப்பு ஏற்க முடியாது. அப்படி இருக்கும் பொழுது அண்ணாமலை போன் பண்ணு பேசினாரா? ஈமெயில் செய்தாரா? யாரென்றே தெரியாதவர்… பார்த்தது கூட இல்லை.தினமும் புதியதாக 4 பேர் கருத்து சொல்லுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் நான் பதில் கூற முடியுமா?
எல்லா பக்கமும் நம் கட்சித் தொண்டர்கள் இருக்கிறார்கள். கட்டாயமாக அவர்களுடன் பாரதிய ஜனதா கட்சி நிற்கும் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கோவை பள்ளி மாணவி விவகாரத்தில் நிச்சயமாக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. தமிழக காவல்துறையினரை பொருத்தவரை மிக வேகமாக விரைந்து அதில் சம்பந்தப்பட்ட டீச்சர், தலைமையாசிரியர் பெங்களூரில் அனைத்து இடங்களிலும் கைது செய்துள்ளார்கள்.
ஒரு நல்ல சூழலை பள்ளியில் உருவாக்க வேண்டியது நம்முடைய கடமை. அனைவருடைய கடமை. இவை நீண்ட நாட்களாக நடந்திருக்கிறது. சாட் எல்லாம் பார்க்கும் பொழுது தெரிகிறது. இதை நிச்சயமாக பாரதிய ஜனதா கட்சி இதைப் பதிவு செய்கிறது. யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களோ மிகக் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது என தெரிவித்தார்.