Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி,கடலூரில்… சாலையில் பள்ளங்கள் சீரமைப்பு பணிகள்…!!!!!

புதுச்சேரி- கடலூர் சாலையில் பல்வேறு இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் சில நேரங்களில் உயிரிழப்புகளும் தவிர்க்க முடியாததாகி விடுகின்றது.

இந்த நிலையில் விபத்தை தடுக்க தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சிமெண்டு கலவையை கொட்டி பொதுப்பணித்துறையினர் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.  இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராமமூர்த்தி நேரில் ஆய்வு செய்தார். இருப்பினும் சாலையை முழுவதும் சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

Categories

Tech |