நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் மக்கள் கடுமையான சிரமங்களை சந்தித்து வந்தனர். அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா கொரோனா பரவல் காரணமாக வெளியூர்களுக்கு செல்ல பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அங்கு பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, திருப்பதி, குமுளி, ஓசூர் ஆகிய ஊர்களுக்கு நாளை முதல் மீண்டும் பேருந்து சேவை தொடங்குவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.