நெல்சன் இயக்கத்தில் விஜய் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்து வெளியான திரைப்படம் பீஸ்ட்.
இப்படத்தில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் 13ம் தேதி அன்று திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில், பீஸ்ட் திரைப்படத்தை புதுச்சேரியில் தடை விதிக்க வேண்டும் என்று புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அவர்களுக்கு தமுமுக மாநில செயலாளர் அப்துல் ரஹீம் கடிதம் எழுதியுள்ளார்.