இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை ஒழிக்க ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. ஆனாலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தங்களை பாதுகாத்துக் கொண்டால் மட்டுமே இதிலிருந்து நாம் தப்பிக்க முடியும். அதற்காகவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,இன்று முதல் தினமும் 22 மணி நேரம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாள்தோறும் பகல் 12 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும். மேலும் இரண்டு மணி நேரம் மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் திறந்திருக்கும் என்று கூறியுள்ளார்.