நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்ட நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது.
இதற்கு மத்தியில் புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தொற்று குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி, காரைக்கால் அரசு பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகின்றன. மேலும் புதுச்சேரியில் ஜூலை 21ஆம் தேதி அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும், 23ஆம் தேதி தனியார் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.