நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் இரவு 12 மணி முதல் மாலை 5 மணி வரை கடும் கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். இரவு எட்டு மணி வரை மட்டுமே கோவில்கள் திறந்திருக்கும். பேருந்துகளில் அதிகளவில் பயணிகள் செல்ல கூடாது. ஆட்டோ, வாடகை காரில் இரண்டு பயணிகள் மட்டுமே செல்ல வேண்டும், திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. மாஸ்க் போடவில்லை என்றால் ரூபாய் 100 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.