இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,இன்று முதல் தினமும் 22 மணி நேரம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது . மேலும் நாள்தோறும் பகல் 12 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் இரண்டு மணி நேரம் மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் திறந்திருக்கும் என்று அரசு தெரிவித்தது.
இந்நிலையில் புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கு பற்றி எந்த புதிய முடிவுகள் எடுக்கப்படவில்லை. காவல்துறை அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்கள் விவாதிக்கப்பட்டதே தவிர ஊரடங்கு பற்றிய புதிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இன்று புதுச்சேரி ராஜ்நிவாஸில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை பற்றி எந்த புதிய முடிவுகளும் எடுக்கப்படவில்லை.
காவல்துறை அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்கள் விவாதிக்கப்பட்டதே தவிர ஊரடங்கை பற்றிய புதிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) May 20, 2021