நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி உணவக ஊழியர்கள் குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. ஏப்ரல் 10-ஆம் தேதி வங்கி மற்றும் எல்ஐசி ஊழியர்கள் அவர்கள் குடும்பத்தினருக்கு செலுத்தப்பட உள்ளது. ஏப்ரல் 13-ஆம் தேதி பால் விநியோக ஊழியர்கள்., ஏப் -15ஆம் தேதி ஆட்டோ ஓட்டுநர்கள் அவர்கள் குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.