புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,112 ஆக உயர்ந்துள்ளது. சுமார் நான்காயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 586 ஆக உயர்ந்துள்ளது